பேரிகார்டு அமைக்காமல் விபத்தை ஏற்படுத்தும் மீஞ்சூர் பேருராட்சி நிர்வாகம்
Published On
September 24, 2022 11:09 AMPosted By
Minjur Talks
Views:
206
மீஞ்சூர் பஜார்
சிவன் கோயில் இணைப்பு சாலை
மீஞ்சூர் பஜார் பகுதிக்கு உட்பட்ட சிவன் கோயில் இணைப்பு சாலையில் கால்வாய் சீரமைக்கும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு வேலை நடைபெற்று வருகிறது.
இச்சூழலில் சாலையின் குறுக்கே எந்த ஒரு தடுப்பு வேலியும் (பேரிகார்டு) அமைக்க பெறாததால், இன்று காலை சுமார் 3.30 மணி அளவில் டி.வி.எஸ் வாகனத்தில் சென்ற மீஞ்சூர் பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வாகனத்துடன் கால்வாயில் விழுந்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பஜார் பகுதியில் பணியில் இருந்த துப்புரவுப் பணியாளர்கள் அவரை மீட்டு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். விபத்துக்குள்ளான கிருஷ்ணன் அவர்களுக்கு தலை மற்றும் உடம்பில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.