× News SignIn
மீஞ்சூரில் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் சாலைக்கு அடியில் சேதம்
Published On March 08, 2023 10:03 AM
Posted By Minjur Talks   Views: 308
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையில் பல இடங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் சாலைக்கு அடியில் சேதம்
மீஞ்சூர்
சேதமடைந்துள்ள மீஞ்சூர் பிரதான சாலை
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர்-பொன்னேரி மாநில நெடுஞ்சாலையில் பல இடங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் சாலைக்கு அடியில் சேதமடைந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் வடிந்து செல்கிறது. சாலை சேதமடைந்துள்ளதால் கனரக வாகனங்கள் பள்ளங்களில் குதித்தபடி செல்கின்றன. இதனால் சாலைக்கு அடியே உள்ள தண்ணீர் பைப்புகள் சேதமடைந்து வருகின்றன. சாலைக்கு நடுவே தண்ணீர் வெளியேறுவதால் மீண்டும் அதே சாலை மேலும் மேலும் சேதமடைந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை சந்திப்பு
தற்பொழுது வெளிவட்ட சாலை சந்திப்பு மற்றும் லட்சுமிபுரம் சாலை சந்திப்பில் தண்ணீர் குழாய்கள் பிரதான சாலை நடுவே சேதமடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே இதேபோல் காவல் நிலையம் எதிரே மற்றும் ராகேஷ் சர்மா தெரு சந்திப்பில் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகியது குறிப்பிடத்தக்கது.
லட்சுமிபுரம் சாலை சந்திப்பு, மீஞ்சூர்
இது குறித்து மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து சேதமடைந்த தண்ணீர் குழாய்களை சரிசெய்து மேலும் இதுபோன்று நிகழ்வுகளை தடுக்க சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.