நோய் பரவும் அபாயத்தில் நந்தியம்பாக்கம் எம்.சி. நகர்
Published On
October 28, 2022 02:10 PMPosted By
Minjur Talks
Views:
337
நந்தியம்பாக்கம் எம்.சி. நகர் பகுதியில் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
எம்.சி. நகர், நந்தியம்பாக்கம்
எம்.சி. நகர் 2வது தெரு, நந்தியம்பாக்கம்
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் உள்ளது எம் சி நகர். இப்பகுதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை என்று எம்.சி. நகர் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
துப்புரவு பணி சரிவர நடைபெறுவதில்லை என்பதை பல முறை நந்தியம்பாக்கம் ஊராட்சில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் குப்பை தொட்டிகளில், குப்பை நிறைந்து உள்ளதாகவும் அதனை நாய்கள் கிளறி தெருவெங்கும் பரவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோய் பருவும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில், குப்பைகள் அகற்றப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆனதாகவும் கூறப்படுகிறது.