மீஞ்சூர் சுற்று வட்டாரத்தில் கொசு தொல்லை அதிகரிப்பு
Published On
September 18, 2022 06:09 PMPosted By
Minjur Talks
Views:
184
பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மீஞ்சூர்
மீஞ்சூர் சுற்று வட்டாரத்தில் கொசு தொல்லை அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தென்மேற்கு பருவமழை துவங்கியிருப்பதை தொடர்ந்து, பருவக்கால நோய்களான டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளும் தலைகாட்ட தொடங்கியுள்ளது.
கொசுக்களை கட்டுப்படுத்த, அணைத்து வார்டுகளிலும், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர். மேலும் வீடு வீடாக சென்று இந்த அப்புறப்படுத்தப்படும் பணியை உடனடியாக துவுக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
கொசுக்களை ஒழிக்க, கொசுப் புகைப் பரப்பும் பணியையும் மேற்கொண்டு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்தும்படி பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.