அலட்சியம் காட்டும் மீஞ்சூர் மின்வாரியம், ஆபத்தில் பொதுமக்கள்
Published On
October 05, 2022 10:10 AMPosted By
Minjur Talks
Views:
279
தாழ்ந்து செல்லும் மின்கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம், துரிதமாக நடவடிக்கை எடுக்குமா மீஞ்சூர் மின்வாரியம்?
ராமாரெட்டி பாளையம், மீஞ்சூர்
ராமாரெட்டி பாளையம் சுடுகாட்டிற்கு செல்லும் வழி
மீஞ்சூர் பேரூரட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 13-ல் உள்ளது ராமாரெட்டி பாளையம் பிரதான சாலை மற்றும் ராமாரெட்டி பாளையம் காலணிகள். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் இறபவர்களின் உடல்களை அடக்கம் செய்ய கொற்றலை (சீமாவரம்) ஆற்றின் கரையில் அமைந்துள்ள தற்காலிக மயானம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மயானதிற்கு செல்லும் வழியில் மின்சார ஓயர்கள் சாலை நடுவே மிகவும் தாழ்ந்து செல்கிறது. இவ்வழியேதான் மீஞ்சூர் பேரூரட்சியின் தண்ணீர் பம்ப்பு நிலையமும் மற்றும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கும் இயங்கி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் மின் ஒயர்களில் உராசி விபத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஏற்கனவே பலமுறை மீஞ்சூர் மின் வாரியத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மீஞ்சூர் மின்வாரியம் இதுகுறித்து ஆய்வு செய்து தாழ்வாக செல்லும் மின் ஓயர்களை உடனடியாக சீர்செய்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.