× News SignIn
சுகாதார சீர்கேட்டில் மீஞ்சூர் அரவிந்த் நகர் பகுதி
Published On October 20, 2022 08:10 PM
Posted By Minjur Talks   Views: 284
மீஞ்சூர் அரவிந்த் நகர் பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு நிலவுகிறது
அரவிந்த் நகர், மீஞ்சூர்
அரவிந்த் நகர் பகுதி (வார்டு எண்:18)
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 18ல் உள்ளது அரவிந்த் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் துப்புரவு பணி சரியாக நடைபெறவில்லை என்று அரவிந்த் நகர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து தாங்கள் பலமுறை மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வாரத்திற்கு ஒன்று அல்லது இருமுறை மட்டுமே குப்பை சேகரிப்பவர் வருவதாகவும், அவரும் சரிவர குப்பைகளை அகற்றாமல் அரைகுறையாக வேலை செய்து செல்வதாக அரவிந்த் நகர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குப்பைகள் சரிவர அப்புபரப்படுத்தப் படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வாரம் ஒரு முறை மட்டும் வரும் மீஞ்சூர் பேரூராட்சி குப்பை சேகரிப்பவர் வாகனம்
மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து தினம்தோறும் குப்பைகளை சேகரித்து நகர் பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்கும்படி இப்பகுதி மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.