× News SignIn
மீஞ்சூரில் மக்களை அச்சுறுத்தும் சேதமான மேன்ஹோல் – பேரூராட்சி, நடவடிக்கை எடுக்குமா?
Published On January 15, 2023 09:01 PM
Posted By Minjur Talks   Views: 431
மீஞ்சூர் பிரதான சாலை சந்திப்பில் கழிவுநீர் கால்வாயின் மேன்ஹோல் சேதம் அடைந்து பல நாட்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மீஞ்சூர்
துர்கா மெடிக்கல் மற்றும் Dr.ஜெகநாதன் கிளினிக் எதிரே, மீஞ்சூர்
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதியான பிரதான சாலை மற்றும் காட்டூர் ரோடு சந்திப்பில் கழிவுநீர் கால்வாயின் மேன்ஹோல் சேதம் அடைந்து பல நாட்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மீஞ்சூரின் முக்கிய சந்திப்பான இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே (துர்கா மெடிக்கல் மற்றும் Dr.ஜெகநாதன் கிளினிக் எதிரே) கழிவுநீர் கால்வாயின் சிலாப்பு சேதம் அடைந்துள்ளது.
இப்பகுதியில் பேருந்திற்காக காத்தியிருப்போர், பள்ளி மாணவர்கள், மெடிக்கல் மற்றும் கிளினிக்க்கு வரும் நோயாளிகள் என அதிகமான அளவு பொதுமக்கள் வந்து செல்வர். சேதமடைந்துள்ள இந்த கழிவுநீர் கால்வாயின் சிலாப்பின் உடைப்பின் வழியே குழந்தைகள் உள்ளே விழும் அபாயம் உள்ளது. சிலாப்பின் கம்பிகள் உடைந்தும் நீண்டும் உள்ளதால் பொதுமக்களுக்கும் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த உடைந்த சிலாபை சரிசெய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.