× News SignIn
மீஞ்சூரில் சரிவர மூடப்படாத கழிவுநீர் கால்வாயால் பள்ளி குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம்
Published On November 25, 2022 11:11 AM
Posted By Minjur Talks   Views: 300
கழிவுநீர் கால்வாய் சரிவர மூடப்படாததால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் தவறி விழும் அபாயம் - மீஞ்சூர் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
T.H. ரோடு, மீஞ்சூர்
மீஞ்சூர் T.H. ரோடு - ஹேமச்சந்திர நகர் சந்திப்பு
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் ஹேமச்சந்திர நகர் சந்திப்பில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாய் இருபுறமும் திறந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் கால்வாய் சரிவர சிலாப்புகள் கொண்டு மூடப்படவில்லை.
பெரும்பாலான பள்ளி வாகனங்கள், மாணவர்களை வாகனத்தில் இருந்து இறக்குவதற்கும் ஏற்றுவதற்கு இந்த பகுதியைதான் பயன்படுத்தி வருகின்றனர். கால்வாய்கள் சரிவர மூடப்படாததால் பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் தவறி விழும் அபாயம் உள்ளது.
அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி திறந்த நிலையில் உள்ள இந்த கால்வாயை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.