× News SignIn
வீணாகும் தண்ணீர், கவனம் செலுத்தாத மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம்
Published On September 18, 2022 10:09 AM
Posted By Minjur Talks   Views: 194
குழாய் பைப்பு உடைந்து ஒரு வாரமாக வீணாகும் தண்ணீர்..
ராமா ரெட்டி பாளையம், மீஞ்சூர்
மீஞ்சூர் ராமா ரெட்டி பாளையத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாசலில் தண்ணீர் பைப்பு உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து மீஞ்சூர் பேரூரட்சியில் புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் சரிசெய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் அதிகளவு வெளியேறுவதால் பள்ளி எதிரே சேரும் சகதியுமாக உள்ளது. மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் இது குறித்து உடனடி கவனம் செலுத்தி உடைப்பினை சரிசெய்ய வேண்டுமென்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.